GOAT படத்தில் மற்றுமொரு சர்ப்ரைஸ்… விஜய்யுடன் இணையும் சிவகார்த்திகேயன்?

GOAT படத்தில் மற்றுமொரு சர்ப்ரைஸ்… விஜய்யுடன் இணையும் சிவகார்த்திகேயன்?
  • PublishedMay 8, 2024

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கோட் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். மேலும் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், நிதின் சத்யா, பிரேம்ஜி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

கோட் படத்தில் பல்வேறு சர்ப்ரைஸ்களும் காத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி அப்படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சிலர் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது லேட்டஸ்ட் அப்டேட்டாக நடிகர் சிவகார்த்திகேயனும் கோட் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக தகவல் பரவி வருகிறது.

இது உறுதியானால் நடிகர் விஜய்யுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் படம் இதுவாக இருக்கும். கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்க உள்ள திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *