தளபதிக்கே “NO” சொன்ன தலைவி… யார் என்னனு தெரியுமா?

தளபதிக்கே “NO” சொன்ன தலைவி… யார் என்னனு தெரியுமா?
  • PublishedMay 2, 2024

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘கோட்’ படம் உருவாகி வரும் நிலையில், தற்போது இதன் இறுதிக்கட்ட ஷுட்டிங் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ள ‘கோட்’ படம் குறித்து பிரபல நடிகர் பகிர்ந்துள்ள தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கலகலப்பான இயக்குனராக அறியப்படும் வெங்கட் பிரபு, தொடர்ச்சியாக கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான ‘கஸ்டடி’ படு தோல்வியை சந்தித்தாலும், ‘கோட்’ படம் தரமான ஹிட்டடிக்கும் என கோலிவுட் சினிமாவே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.

இந்த நிலையில் ஒரு பிரபல நடிகை விஜய்யின் கோட் படத்தை நிராகரித்து இருக்கும் செய்தி பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா தான் அது. அவர் விஜய்க்கு நோ சொன்ன நிலையில் அஜித்தின் குக் பேட் அக்லி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

கோட் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆட தான் அவரிடம் அணுகினார்களாம். அது முடியாது என்று தான் ஸ்ரீலீலா மறுத்துஇருக்கிறார்.

தமிழில் முதல் படம் ஹீரோயினாக தான் நடிப்பேன், ஒரு பாடலுக்கு எல்லாம் ஆட மாட்டேன் என கூறிவிட்டாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *