‘GOAT’ பட முதல் சிங்கிள் பாடல்… வெளியானது டீசர்

‘GOAT’ பட முதல் சிங்கிள் பாடல்… வெளியானது டீசர்
  • PublishedApril 13, 2024

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தின், முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாக உள்ளதாக டீஸர் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் ‘GOAT’ திரைப்படத்தின், இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் பரபரப்பாக நடந்து வருகிறது.

அண்மையில் தளபதி விஜய்யின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான AGS நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

‘கோட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, நாளை மாலை 6 மணிக்கு முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா – தளபதி காம்பினேஷனில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இப்படம் உருவாகியுள்ளது. இந்த பாடலை விஜய் பாடியுள்ளது இன்னும் சிறப்பு என்றே கூறலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *